புதியதொரு கருவறை
உன் வயிற்றுக்குள்
என்னை இழுத்துப்போட்டு
உறங்கிப்போனாய் நீ .
உன் வயிற்றுக்குள்
தண்ணீர் அலம்புவதாய்
கற்பனை செய்துக்கொண்டிருக்கிறேன் நான் .
ஆம்,
சட்டியில் சிறுதிருந்த சோற்றால் நானும்
பானையில் நிறைந்திருந்த நீரால் நீயும்
வயிற்றை நிரப்பியிருந்தோம்.
எங்கோ கேட்டது ஞாபகம் வருகிறது !
வயிற்றுக்குள் பிள்ளை தண்ணீரில்தான் இருக்குமாம்
ஆனால் இப்போதோ
தண்ணீர் உன் வயிற்றுக்குள்ளயும்
நான் உன் வயிற்றுக்கு வெளியேயும்!
இப்புதியதொரு கருவறையில்
மறைந்திருக்கிறதோ தொப்புள் கொடி!
வியந்துப்பார்க்கிறன் உறங்கி கொண்டிருக்கும் உன்னை..!