திருநெல்வேலி

வீரத்தின் விளைநிலமும் , பாசத்தின் விளைநிலமும் எங்கள் திருநெல்வேலியே .

தமிழ் நாட்டின் ஆறாவது மிகப்பெரிய நகரமும் இதுவே .

பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வேணுவனப்புராணம் என்னும் நூலில் திருநெல்வேலிக்கு வேணுவனம் எனும் பெயர் சூட்டி பாடப்பட்டு இருக்கிறது .

வேணு என்றால் மூங்கில், பண்டைய காலத்தில் மூங்கில் காடாக விளங்கியது எனவே வேணுவனம் என அழைக்கப்பட்டது .

விவசாயி ஒருவரின் நெல்லுக்கு சிவபெருமான் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனவும் , அடைமொழியாக திரு சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனவும் பெயர் கொண்டது.

திரு என்றால் மதிப்பு , நெல் என்றால் உணவு , வேலி என்றால் பாதுகாப்பு இதுவே அதன் பொருள் .

நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம் ,ஐந்து வகையான நிலங்கள் பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி , தினசரி எட்டு லக்ஷம் மக்களால் இயங்கி கொண்டுஇருக்கும் பெருநகரம்.

திருநெல்வேலி , பாளையம்கோட்டை என இரண்டு நகரங்கள் கொண்டது அதனால் இது இரட்டை நகரம் எனவும் அழைக்கப்படும் . தாமிரபரணி ஆறு இவ்விரு நகரங்களுக்கு இடையே பாய்கிறது .

திருநெல்வேலி ஆனது தாமிரபரணி ஆற்றின் மேற்கும் , பாளையம்கோட்டை ஆனது கிழக்கும் அமைந்துள்ளது .

திருநெல்வேலியின் சிறப்புஅம்சங்கள் :

1 . இரண்டு அடுக்கு மேம்பாலம் கொண்ட முதல் இந்திய நகரம் இது .
2 . தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவஸ்தலம் அமைந்துள்ள இடம்.
3 . தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் கொண்ட மாநகரம் .
4 . சரி கம பத நிச எனும் ஏழு சொரங்கல் பாடும் இசை தூண் உள்ள இடம்.
5 . ஒன்பது கிலோமீட்டர்சுற்றளவு கொண்ட மாநகரம் .
6 . தமிழகத்திலே அதிகமான பத்து அணைகள் கொண்ட செழிப்பான மாவட்டம் .

தென்பாண்டி சீமை எனவும் அழைக்கப்படுகின்றது .

மாவட்டத்தின் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலி தமிழ் எனப்படும் . பெரியவர்களை அண்ணாச்சி என அழைக்கப்படும் நெல்லை தமிழ் வேறு எந்த தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை .

முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்து, மறைந்த இடம் .

காப்பிய மன்னன் தொல்கப்பியர் வளர்ந்த இடம் , அகத்திய மாமுனி வளர்ந்த இடமும், தியாகத்தின் உருவான வாஞ்சிநாதன் பிறந்த இடமும் இதுவே.

நாளிதழ் அரசன் சிவந்திஆதித்தனர் பிறந்த இடமும் நம் திருநல்வேலியே .

திருநெல்வேலிகாரங்க சாதிக்காத துறையும் இல்லை கலையும் இல்லை. கலைத்துறையில் சிங்கம் ஹரி பிறந்த இடம் ,
தமிழகத்தையே அண்ணாந்து பார்க்கவைத்த நிகழ்ச்சி நீயா நானா அதன் இயக்குனரும் , தயாரிப்பாளரும் திருநெல்வேலி தான்.

தாகத்திற்கு தாமிரபரணி ஆறு

வீரத்திற்கு பாஞ்சாலம் குறிச்சி

அருவிக்கு குற்றாலம்

தென்றல்க்கு தென்காசி

புலிக்கு முண்டந்துறை

அழகுக்கு சேரன்மகாதேவி

படிப்புக்கு பாளையம்கோட்டை

டேம்க்கு பாபநாசம்

ஆள்பிடிக்க அல்வா

ஆள்முடிக்க அருவா

அன்றும் இன்றும் தமிழுக்காக போராடும் உள்ளங்கள் நிறைந்த இடம் திருநெல்வேலி .



நன்றி

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 8:43 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : thirunelveli
பார்வை : 7565

மேலே