கலங்கப் பட்டவன்
அந்தக் குப்பைத்தொட்டிக்குள்
பத்தோடு பதினோறாவதுக் குப்பையாகக் கிடந்தான்
அவன்......
கண்களை மூடிக்கொண்டு
அந்தப்பக்கம் திரும்பிவிடு - என்று
உடல் மொழி கூறினாலும்
மனமொழி
அதற்கு
எதிரும் புதிருமாக நிற்கிறது.....
காண்கிறேன்
கண்களில் நீர் வழிய.......
சிலர்
அவனிடத்தில் சென்று
காரி உமிழ்ந்து செல்கிறார்கள்.....
சிலர்
அவனிடத்தில் சென்று
ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.......
சிலர்
அவனிடத்தில் சென்று
பரிதாபத்திற்கு உரியவனே - என்று
அவனைப் பார்த்துப் பரிதாபப் படுகிறார்கள்......
இதையெல்லாம்
சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவர்களை விலக்கிக்கொண்டு
அவனருகில் சென்றேன்..........
உனக்கு கோபம் வரவில்லையா?
ஏன் இப்படி இருக்கிறாய்?
சொல்?
சொல்?
நீ யார்?
உன் பெயர்தான் என்ன?
இக்கேள்விகளுக்கெல்லாம்
அவனது பதில்
முற்றுப்புள்ளி வைத்தது....
எனக்கு அடையாளம் கிடையாது......
என் பெயர்
உண்மை............!