இதயமும் வலிக்குது

--------------------------------------

ஏரோட்டி உழுதேன்
ஏக்கமுடன் உள்ளத்தை
தடையாக வந்ததொன்று
தவிப்புடன் நோக்கினேன்
உடையென உணர்த்தியது
உழவனவன் உடுத்தியது
களைந்து எறிந்ததோ
களைப்பில் விழுந்ததோ
கோபத்தில் வீசியதோ
கோவணத்தின் பாதியதோ
அழுதவன் புரண்டதால்
அவிழ்ந்த ஆடையதோ
சாலைக்காக கல்நடும்
சதிசெயல் கண்டதால்
சாலையில் நிற்கிறான்
சாமானியன் சாகிறான்
எண்வழிச் சாலையென
எண்ணற்றோர் இன்று
கண்ணிழந்த மனிதராய்
வாழ்விழக்கும் காட்சி
தாங்கொனா துயரமது
இதயமும் வலிக்குது !

​​
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Jul-18, 3:50 pm)
பார்வை : 497

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே