கவ்வா இருந்தா என்ன தம்மா இருந்தா என்ன

ஏண்டப்பா மாரி உம் மவன் மணியரசன் எங்கடா போயிட்டான்?
😊😊😊😊😊😊
கழுதைக் கெட்டச் சுவரு. பசங்க கெட்டா மட்டையாட்டம் (கிரிக்கெட்) வெளையாடி நேரத்தை வீணடிக்கிறது. சரி, எதுக்கும்மா அவனக் கேக்கற?
😊😊😊😊😊😊
இல்ல, அவனத் தேடிட்டு ஒரு பையன் வந்தான். அவம் பேரக் கேட்டன். 'கவ்வு தம்மு' ன்னு சொன்னான்.
😊😊😊😊😊
அதுக்கென்ன இப்ப?
😊😊😊😊
மணியரசந்தாஞ் சொன்னான்: கவ்வுன்னா மாடாம். தம்முன்னா இந்தத் தறுதலப் பசங்க பீடி வெள்ளச்சுருட்டைப் பத்த வச்சு பொகைய உள்ளுக்கு இழுத்து வேளிய உடறதுன்னு. இப்பிடி அர்த்தம் இருக்கறபோது அந்தப் பையனைப் பெத்தவங்க எதுக்குடா அவுனுக்கு கவ்வுதம்முன்னு பேரு வச்சிருப்பாங்க?
😊😊😊😊😊
பேரு வைக்கறது பெத்தவங்களோட விருப்பம். அதோட சோசியகாரங்கிட்டயும் ராசி பலன் பாத்துத்தான் பேரு வைக்கறாங்க.
😊😊😊😊😊
சரி, அந்தப் பேருக்கு என்னடா உண்மையான அர்த்தம்?
😊😊😊😊😊
நா என்னத் கண்டேன். அவம் பேரு கவ்வா இருந்தா என்ன? தம்மா இருந்தா என்னா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@பிறமொழிப் பெயராசையில் பெரும்பாலான பெற்றோர்கள் பொருள் தெரியாத எல்லோராலும் சரியாக உச்சரிக்கத் தெரியாத பெயர்களைப் பிள்ளகளுக்குச் சூட்டிவிடுகிறார்கள்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல.
சிந்திக்க.
தமிழ்ப் பற்றை வளர்க்க.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆●●●●●●●●●●●●◆◆■■■
Goutham = name of a river; full of life.
indiachildnamescomல் பார்க்கவும்.