மனிதா

போராடுவோம்
போராட்டம் புதிதல்ல
போராடுவோம்
ஊமையாக வாழ்ந்த காலமெல்லாம் போதும்
உரிமையை மீட்க போராடுவோம்
அடக்குமுறைகளை உடைத்து நொறுக்கவே
ஆதிக்க சுரண்டலை தகர்த்து எறிந்திட
புத்தன் வழி நின்று
போராடுவோம்
புதுக்காலங்கள் பிறக்க போராடுவோம்
வாள்கை மாறும்போது வாழ்கைமாறாத
பாமர மக்களின் பஞ்சநிலை தீராத
வா ஒன்றுபடுவோம்
வென்றுவருவோம்
எரிகிறதே நெஞ்சம் எரிகிறதே
இந்த அவல நிலைகண்டு எரிகிறதே
அழிகிறதே உழவு அழிகிறதே
உழுவ நிலமின்றி அழிகிறதே
இழந்ததெல்லாம் போதும் இனி
நம்மளோட காலம்
வா ஒன்றுபடும் நாளை வென்றுவருவோம்
மாற்றம் பல விதைப்போம்
மலமள்ளும் தொழிலுக்கு முடிவோனும் கொடுப்போம்
குடிசையில வாழ்ந்தாலும் சந்தோஷத்துக்கு பஞ்சமில்லை
கோட்டைல எவங்கொடி பறந்தாலும் எங்கக்காதமட்டும் மாறவில்லை
ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உழைக்குற மக்கா
காசுக்காக ஓட்ட இனிவேனடா விக்க
ஒடுக்க பட்டுவிட்டோம் இனி ஒதிங்கிவாழமாட்டோம்
அமைப்பை திரண்டு அதிகாரம் பகிர்ந்து வா
ஒன்று படுவோம் நாளை வென்றுவருவோம்



மு .இராம்குமார்

எழுதியவர் : மு ராம்குமார் தமிழன் (4-Jul-18, 8:51 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : manithaa
பார்வை : 85

மேலே