தன்னம்பிக்கை
உன் சுவடுகள் பதிக்க
உன்னை உலகம் அறிய
உன் வழி அனைவரும் நடக்க
உறுதி கொள் மனிதா
கவனம் கொள் நண்பா
தடைகள் தாண்டியே பயணம்
செய்
விதிகள் ஏற்காமல் மதி வழி
செய்
சோம்பலை விட்டு முயற்சி
செய்
சோதனைகள் ஏற்று சாதனைகள்
செய்
வீரமாய் வாழ்
விவேகமாய் இரு
சுய சிந்தனை கொள்...
சுயமாய் வாழ்ந்து
உன் உலகை படைத்திடு...