ஈசலின் வாழ்க்கை
ஒரு நாள் வாழும் ஈசலே
உனது வாழ்க்கை மிக சிறிது, அதையும்
நீ சுறுசுறுப்பாக ஒளியிடம் வீசலே
உனது வழக்கமான பழக்கம்!!!!
நீ கவலைபடாமல் ஒரு நாள் இருக்க
மனிதகுலம் கவலைப்பட்டு வாழ்நாள்முழுக்க
இனிமை நிறைந்த மகிழ்ச்சியைபலமுறை இழக்க
இதனால் என்ன பயன் என உணர வேண்டாமா?
கவலைபடாதே முடிந்தவரை பிறரை மகிழ்வி
இதுவல்லோ அருமையான இன்ப நிகழ்வு!!!
ஈசலே, நீ பறந்து பறந்து செல்ல
மறுநாள் இறந்து இறந்து போக,
இது புரியவைக்கும் மெல்ல
இறப்பதற்கு முன் இனிமையாக வாழென்று!!!!
மனித வாழ்க்கையை கற்றுகொள்
இயற்கை ஒரு இலவச பள்ளிக்கூடம்
இதுவல்லோ இயற்கையின் மென்மையான
மேன்மை பொருந்திய புரட்சி!!!
இதற்கு ஈசலும் சாட்சி!!!
உயரட்டும் மக்களின் மாட்சி!!!