சேலம் முழுதும் ஓலம்

கும்பி எரிகிறது!
தம்பி உனக்கு எரியவில்லையா!
நம்பி இருந்த நிலமும் போனது!
சிம்பி எழுந்து வருவது நீ! எப்போது!
கம்பி எண்ணுகிறான் கேள்வி எழுப்பியவன்!

தொண்டும் சேவையும் கல்லறை சென்றது காட்டில்
குண்டும் குழியுமே முழுவதுமே மூடாத ரோட்டில்
கண்டும் காணாது வாழும் தலைவர்கள் நாட்டில்

மலையை குடைவார் வண்டிகள் வந்துபோக – கார்ப்பரேட்டிடம்
விலையை அடைவார் ஏழைகள் வெந்துசாக
தலை ஆட்டும் பொம்மைகள் ஆளுகிறது-அதனால்
மலைப் பூட்டும் கொடுமைகள் நீளுகிறது

பசுமை வழிச் சாலை –அல்ல
பசுமை அழிச் சாலை
-அம்பேத்

எழுதியவர் : (7-Jul-18, 2:44 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
பார்வை : 54

மேலே