ஆய்ந்து முடியவில்லை பொருளாதாரக் கணக்கு

காய்ந்திடும் கதிரும் நிலவும்
வானில்
காய்ந்த ஓலைக் குடிசையில் ஏழைகள்
தரையில்
காய்ந்த வயிற்றுடன் அவர்கள்
ஓய்ந்து கிடக்கின்றனர்
ஆய்ந்து முடியவில்லை பொருளாதாரக் கணக்கு
குளிர்பதன அறைகளில் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-18, 7:14 pm)
பார்வை : 66

மேலே