குடிக்காதீங்க மாமா

பாண்டி 2
என்று கேட்டு டிக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தாள்.தன் கணவனை மடியில் சுமந்து கொண்டு
தன் பிள்ளையை மார்பில் தூங்க வைத்துக் கொண்டும் இருந்தாள் பிரபா.
கடவுளே
எப்படியாவது
இப்படியே போற மாதிரியே திருப்பியும் திண்டிவனத்துக்கு அவர குடிக்க விடாம
கூட்டிட்டு வந்துடணும் நல்லபடியா என்று அவள் மனதுக்குள் அவள் வேண்டாத கடவுள் இல்லை.
தன் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தலையை வருடியபடி .
தன் பிள்ளையை தடவி கொடுத்தாள்.
பாண்டி பஸ் ஸ்டாண்ட் வந்ததும்.
எழுந்திருங்க மாமா.
பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சு
என்று எழுப்ப
அவன் மெல்ல கண் விழித்து
குழந்தையை தூக்கிக் கொண்டு எழுந்தான்.
அவள் புடவையை சரி செய்து கொண்டு .
அவன் பின்னாலேயே பின் தொடர்ந்தாள்.
அவன் ஷேர் ஆட்டோவில் ஏறி
ராஜா தியேட்டர் சிக்னல் 2 அண்ணா என்றான்.
அவள்
அவர்கள் இருவரையுமே பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் தன் பிள்ளை மீதும் அவள் மீதும்
தன் உயிரையே வைத்துள்ளான்.
அவளும் தான்.
சிக்னல் வந்ததும்
அவள் கையை சேர்த்து பிடித்துக் கொண்டு
சாலையை கடந்து
துணிக்கடைக்கு சென்றான்.
அங்கே வீட்டில் எல்லோருக்கும் தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு
பின்
நகை கடைக்கு சென்று நகை எல்லாம் வாங்கிய பின்
அருகாமையில் ஒரு ஓட்டலுக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டு முடித்து
மீண்டும் ஷேர் ஆட்டோ ஏறி
பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினார்கள்.
இறங்கியதும்
பாப்பாவை
அவள் கையில் கொடுத்து
பாப்பாவை பத்திரமா தூக்கிகிட்டு எல்லா பொருளையும் எடுத்துட்டு போ செல்லம்.
நான் அடுத்த பஸ் ல வரேன்.
எதுக்கு .
எங்க போற.
ஒரு முக்கியமான வேலை.
இப்ப தான் ஞாபகம் வந்தது.
நானும் கூட வரேன்.
பாப்பாவை எல்லாம் தூக்கிக்கொண்டு நீ ஏன் மா சிரமப்படப் போற.
எனக்கு ஒரு சிரமமும் இல்ல.
நானும் கூட வரேன்.
நான் எங்கேயும் போல
அவசரமா யுரீன் வருது.
போய் இருந்துட்டு வந்துடறேன்.
நீ இங்கயே இரு.
நீ எங்க போனாலும்
நானும் உங்கூடயே வருவன்.
ஏய் அங்கலாம் எப்படி டி நீ வருவ...
யார்னா பாத்தா தப்பா நினைப்பாங்க.
எனக்கு எல்லாத்தையும் விட நீ தான் மாமா பெருசு...
தமிழ் தலைல அடிச்சு சத்தியம் பண்ணுங்க இனிமே குடிக்க மாட்டேனு.
நீ என்ன
பைத்தியமாடி
குழந்தை தலையில போய் சத்தியம் பண்ண சொல்ற.
ஆமாம் நான் பைத்தியம் தான்.
உன் மேல அளவில்லா பாசம் வச்சிருக்கற பைத்தியம்..
நீ எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று என்னால உன்ன அப்படி விட முடியாது மாமா...
நீ ரொம்ப ரொம்ப நல்லவன் மாமா..
நான் உன் மேல உயிரையே வச்சிருக்கன்.
கண்ட கண்ட நாய் எல்லாம் உன்ன பத்தி அசிங்கமா பேசுது.அத கேக்கும் பொழுது என் உசுரே போய்டுது. இந்த பிள்ளை முகம் தான் என் உசுர இந்த உடம்புக்குள்ள ஒட்டி வச்சிருக்கு.
என் தலையில் அடிச்சு சத்தியம் பண்ணு மாமா இனிமே குடிக்க மாட்டேனு.
இது நீ கட்டன தாலி தான.
நான் உன் பொண்டாட்டி தான
சத்தியம் பண்ணு மாமா...
சத்தியம் செய்யாமல்
சாலையை வேகமாக வாகனம் வருவதை கூட நின்று பார்க்காமல் கடந்து கொண்டிருக்கிறான்.
பின்னாடியே அவள் வண்டியை பார்த்தவாறு பதறி ஓடுகிறாள் மாமா வண்டி வருது மாமா என்று
பிடித்து கீழே மண் தரையில் தள்ளி விட்டு
குழந்தையை தூக்கி அவன் மீது வீசினாள்.
கண் இமைக்கும் பொழுதில் வண்டி அவள் மீது மோதி தூக்கி வீசியது.
அவன் கணவன் கதறிக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அவள் அருகில் ஓட...
எல்லோரும் ஐய்யோ அம்மா என்று
அருகில் ஓடுகிறார்கள்.
அவள் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது.
தூக்கி மடியில் வைத்து கொள்ள
அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு
குடிக்காதீங்க மாமா ஆ என்று சொல்லும் பொழுது உடல் தூக்கி வாரி போட மூச்சு ஆர்ப்பரித்து அடங்கியது.
உன் மேல சத்தியமா
குழந்தை மேல சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன் பிரபா எழுந்திரு பிரபா.
குழந்தை அழறா பிரபா...பிரபா...
நாம நூறு வருஷம் சேந்து வாழணும் பிரபா...
பசியில குழந்தை அழற சத்தம் கேக்கலையா...நம்ம குழந்தைய பாரு பிரபா...
எழுந்து பால் கொடு பிரபா...
எழுந்திரு பிரபா...
அவளை அங்கிருந்து தூக்குகிறார்கள்
தன் கணவனையும் பிள்ளையையும் மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள்.
~ பிரபாவதி வீரமுத்து