மனமே நீ ஈசன் நாமத்தை - குந்தலவராளி

அஷோக்குமார் (1941) திரைப்படத்திற்காக பாபனாசம் சிவம் இயற்றி, M K.தியாகராஜ பாகவதர் குந்தலவராளி ராகத்தில் பாடும் ஓர் இனிய பாடல் ’மனமே நீ ஈசன் நாமத்தை‘

மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
மனமே நீ ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய் (மனமே)
மனமே ...ஆ.ஆ.ஆ

கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே

காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
காம மோஹமத வைரிகள் வசமாய்
கர்மவினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனமோடு துயறுராமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பர சுகம் பெறவும்

(மனமே)

விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விளங்கும் தூய ஸர்ஜன சங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விடுத்தே கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விளக்கில் வீழும் பழமென்று மயங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும்
விட்டிலாகாதே சஞ்சல மெங்கும் (மனமே)

இப்பாடலை யு ட்யூபில் கேட்டு மகிழலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jul-18, 2:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 117

மேலே