வலி வலிதானடி காதலில் 555
என்னுயிரே...
என்னோடு நீ இருக்கும்போது
உன் அன்பு முகமும்...
என்மீது நீ காட்டும்
உரிமைகளும் நிரம்பி இருந்தது...
இப்போது நீ
என்னுடன் இல்லை...
இப்போதுதான் உன் நினைவுகள்
என்னில் முழுவதுமாக நிரம்பி இருக்கிறது...
என் வாழ்வில் மறக்க முடியாத
வார்த்தைகளை கொடுத்தவளும் நீதானடி...
காதலில் ஆண்டுகள் என்ன
சில நாட்கள் என்ன...
காதல் கொடுக்கும்
வலி வலிதானடி வாழ்வில்.....