காதலில் சிக்கல் -முடிச்சை அவிழ்ப்பது யார்
பார்வையால் ஒன்று சேர்ந்தோம்
நீயும் நானும்
நம்மை சேர்த்த பார்வை
தந்தது நேசம்
நம்மிடையே நேசம்
வளர்ந்தது நெருக்கமும் கூட
மோகமும், காமமும் சேர
உள்ளத்தால், உணர்வால்
சேர்ந்தோம் ஒன்றானோம்
ஈருடல் தந்த நெருக்கத்தில்
ஓருயிராய் இருந்தோம்
காதல் இப்போது எங்களுள்
ஏதோ கானா புதிய ஓர்
உணர்ச்சியைத் தந்தது
மோகமும், காமமும் ஓய்ந்ததோ
அப்படித்தான் தோன்றியது
எங்கள் காதல் வளர்ந்தது
நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய்
ஊரார் , உற்றார் அறிய காதலித்தோம்
காதல் எங்களை மணமேடையில் ஏற்றியது
மணம்முடிய கணவன்-மனைவி
என்ற புதுபதவி கிடைத்தது
அந்தகோ, கூடவே வந்ததே
எங்கிருந்தோ விரிசல் தந்திட
எங்கள் உறவில்- அந்த
இருவர் மனத்திலும் எங்கோ
உறங்கிக்கிடந்த அகம்பாவம்
உனக்கு நான் சமம், எனக்கு நீ
இந்த வேண்டா மனப்பான்மை
கொண்டு சென்றது எங்கள்
மணவாழ்க்கை முடிய, முறிய
பிரிந்திருக்கிறோம் இப்போது
நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து
விவாக ரத்துக்கு ......................
இப்போது யோசித்தேன்
என்ன காதல் உறவில்
இருவரும் சேர்ந்தோம், வாழ்ந்தோம்
இத்தனை நாள் காதலுறவில்
இரவும், பகலும் மறந்து
பேசிய பேச்சுக்கள்.................
சல்லாபங்கள்...........இவற்றில் நாம்
கண்டதென்ன ? ஒன்று இல்லையா
இதைக் காதல் என்று நம்பினோம்
ஈருடல் ஓருயிர் என்று ..............
இவை வெறும் மோகப் பிதற்றல்களா
இப்படியே யோசித்தேன் சில நாட்கள்
என் தவறு தெரிய வந்தது
என் கண்முன்னே..............
சூரியனைக்கண்ட பனிபோல்
விலகியது என் மனதில்
ஒதுங்கியிருந்த அந்த 'மதம்'
அகம் என்ற மதம்
இதோ இப்போது என் மனம்
மீண்டும் என்னவனோடு சேர்ந்திட
எண்ணத்தை தந்திட ...........
விரைந்தேன், நீதி மன்றம் நாடி
நான் அவன் மீது தொடுத்த
அந்த 'விவாக ரத்து வழக்கை'
திரும்பிப்பெற, அவனோடு மீண்டும்
இணைந்திட.......
புதுக் காதலராய், கணவன்-மனைவியாய்
காலம் உள்ளவரை வாழ்ந்திட..
பெண்புத்தி பின் புத்தியா ..............
என்னை அவன் ஏற்க தவறிவிட்டால்.......?
இல்லை, இல்லை..........அப்படிஇருக்கக் கூடாது
என் தவறை தவறென்று அதை சொன்னால்
அந்த என்'அகம்பாவம்' என்னுள் இல்லையே இப்போது
என்னவனும் இதை அறிந்து ஏற்பானா என்னை மீண்டும்
நம்பிக்கையில் நான்..................................
அதற்கு என் நீதி ஆலோசகர் கூறியது
'அவனும் இப்படியே நினைத்தால்'
உன் ஆசை நிறைவேறும் என்றார்............