உனக்கு கேட்கிறதா

உன் விரலை கேட்கிறது
என் கை
உன் கை கோர்த்து
நெடுந்தூரம் நடக்க!!
உன் பாத சுவடுகளை கேட்கிறது
என் கால்கள்
உன்னை பின்பற்றி நடக்க!!
உன் சம்மதத்தை கேட்கிறது
என் இதயம்
வாழ்க்கை பயணத்தில் பயணிக்க!!
உனக்கு இதெல்லாம்
கேட்கிறதா??