காதலே இது உண்மையா

என் இனிய காதலே நீ
ஒரு இதயத்தில்
முளைத்து
இன்னொரு இதயத்தில்
மலர்ந்து
மற்றோரு இதயத்தில்
வாழ்வதாக சொல்கிறார்களே
இது உண்மையா..?

நீ எப்படி இருந்தாலும்
எனக்கொன்றும்
வருத்தமில்லை
ஒருவேளை நீ
என்னுள் வந்தால்
தோன்றி வளர்ந்து
வாழ்ந்து அழிவது எல்லாம்
என் ஒரே இதயத்தில்
என்னவளுக்காக
காத்திருக்கும்
இந்த ஒரே இதயத்தில் மட்டுமே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jul-18, 8:37 am)
பார்வை : 97

மேலே