பிடிபடாத காலம்

நிதானப்படுத்தப்பட்ட
காலங்களில்
மீறிப் போனக் கனவுகள்

தொல்லைகளை
நிதானமாகக் கொடுத்து
கெடுத்துச்சென்ற நினைவலைகள்

மின்னும் வர்ணங்களில்
ஒளிந்து போனக் காரணங்கள்

சரளமாக
சரிந்து போன
காதல் சுவடின்
அறிகுறிகள்

எல்லாவற்றையும்
திரட்டி வைக்கிறேன்
கவிதைகளின்
முதல் வாசலில்.....................................

எழுதியவர் : கவியரசன்,மு. (11-Jul-18, 8:33 pm)
சேர்த்தது : முகவியரசன்
பார்வை : 62
மேலே