ஓர் அழகிய கனவு

கவித்துவம் மிக்க
இப்பெண்ணெண்ணும்
கவிதைதனை என்னென்று
வர்ணிக்க!
ஓசையின்றி விசையோடு
செல்லும் இப்பாவையின்
பார்வைதனை என்னென்று
வர்ணிக்க!

அவள் விடும் கணைக்கொரு
கவிதை எழுதலாம்!
அவள் விழி எழுதும்
கவிதையிலே இதயம் பல
இறந்துவிடும் இல்லையேல்
பறந்துவிடும்!

உதடுமுதடும் உரசி உதிர்க்கும்
வார்த்தைதனை
என்னென்று வர்ணிக்க!

நிலவை யாரிங்கே
கொணர்ந்தது!அந்நிலவால்
பூலோகம் இருண்டது!
அவளது கருங்கூந்தலை
காற்று தடவிச் சென்று
காதல் கொள்ளும்!

கம்பன் கண்ட வார்த்தைகளும்
ஒழிந்கொள்ளப் பார்க்கும்
இக்கண்ணிகையை
காண்கையிலே!

உடை கொண்ட நேக்கும்
நடை கொள்ளும் நேக்கும்
குடைகொண்டு பறக்க
வைக்கும் வாலிப மனசை!

விந்தையான இப்பெண்ணை
சந்தை கொண்டு சேர்த்தால்
சிறிதுநேரம் போதும்
அப்பொருட்கள் யாவும் விற்க!

இவளென்ன இந்திரசபையின்
மந்திர மோகினியோ?
கலைக்கின்றாள் நினைவுதனை
உலவுகின்றாள் கனவுதனில்!

இதயமது இல்லை
என்னிடத்தில் இன்னுமது
போய் சேரவில்லையோ
அவளிடத்தில்!

என் நினைவை களவுகொண்ட
இதய தேவதையே!
நினைவுகொள் இங்கொரு
இதயம் துடிக்கிறது
உன்னை எண்ணி என்று!

களவு கொண்டேனாம்
நானவளை!என்னெதிரே
கண்ணியவள் இதழ்திறந்து
சொன்ன வார்த்தைதனை
இதயம் கேட்டு இன்னும்
இறங்கவில்லை வானைவிட்டு!

தொப்பென்று ஓர் சத்தம்
விழித்துப் பார்க்கையில்
தரையில் எனதுடல்
அவ்வலியிலும் ஓர்
நமட்டுச் சிரிப்பு!அழகு
தேவதையை எண்ணி!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (11-Jul-18, 11:10 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : or alakiya kanavu
பார்வை : 763

மேலே