உன் மனதில் நான்

ஏய் பெண்ணே என்னைவிட்டு
நீ பிரிந்து போனால்
உன் நினைவை இடைவிடாமல் இரசிப்பேன்
என் இரத்தத்தில் உனக்கென கவிதைகள்
ஒவ்வொன்றாய் படைப்பேன்
உன்னை இஷ்டப்பட்டதால் தான்
இப்போ
தினம் தினம் என் மனதோடு கஷ்டப்படுகிறேன்
கல்லறைக்குள் கவியெழுதுகிறேன்
இருவரிகளாவது நம்மை
இனைத்திடதா என்று
அந்த காவிஞனும் சொன்னான்
நீ எழுதுவது கல்லின் மீது
அது ஒரு நாளும் கரையாது
மனது கல் என்று
அது கரையாது ஆனால் காலங்கள்
கடந்து நிற்கும் என்பேன்
பெண்ணே உன் மனதில் நான் ..

எழுதியவர் : சண்முகவேல் (12-Jul-18, 7:40 pm)
Tanglish : un manathil naan
பார்வை : 631
மேலே