முதல் முத்தமாய்
முதல் சிறை
முதல் முறை பிறக்கிறேன்
அவள் கண்ரெண்டில்
இமைகள் கனமாய் துடிக்க
இதழ்கள் தேன் துளியாய் சுவைக்க
மார்பு கூட்டில் மணிதுளிகள் கடக்க
விரைந்து செல்லும் பொழுதுகள்
கலைந்து செல்லும் கனவு கடிதங்கள்
பதிக்கின்றேன்
முதல் முத்தமாய்
என்னை உண்ணில்
மொத்தமாய் .