கடுமையான காலம்
குறை இல்லாதவர் யார்?
குற்றம் செய்யாதவர் யார்?
நீதி மன்றங்களே குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டுவிடும் போது
பாவம், கண்களுக்கு புலப்படாத கடவுள் மட்டும் என்ன செய்யும்?
மானுட மனமெல்லாம்
பணத்திற்கு அடிமையாய் இருக்கும்போது
குற்றம் செய்யாமல் வாழ்வது என்பது இயலாது
மனசாட்சி எல்லாம் இறந்து போன பின்பு
அக்கிரமங்கள் யாவும் எழுந்து விளையாடத்தான் செய்யும்!