கர்மவீரர்

விருதுநகர் அவர் பிறந்த ஊராம்!
காமாட்சி முதல் வைத்த பேராம்!
தாயாரோ தாலாற
ராசா என்றழைத்திடவே,
ராசாங்க அதிபதியோ
காமராசு என்றானார்.
தென்னாட்டு காந்தியென
தென்றல் தெம்மாங்கு பாடிடுமே!
இவர் போல ஒரு தலைவர்
இனியிங்கு கிடைப்பாரோ?
என்றெண்ணம் எந்நாளும் ஏங்கிடுமே!
பகட்டென்ற வார்த்தைக்கும்
பொருள் நீயும் கண்டதில்லை!
பதவியாசை மனதினிலே
துளியளவும் கொண்டதில்லை!
பெருந்தலைவர் என்றென் நா
பெருமித்துத் தானுரைக்க
பெரும்பேறு பிறந்த மண்ணில்
தந்து சென்றாய் !
பாமரர்கள் படிப்பினைத் தான்
பழம்போல ருசித்திடவே
பள்ளி பல ஆயிரங்கள்
திறந்து வைத்தாய் !
பசியென்னும் பிசகு நீங்கி
பாலரெல்லாம் பள்ளிவர
மதிய உணவு திட்டம் மூலம்
விருந்து வைத்தாய்!
பணக்கட்டு எண்ணிப்பார்க்க
பதவியேறும் இந்நாட்டில்
அணைக்கட்டுப் பல கட்டி
பாசனத்தைப் பெருக்குவித்த பெந்தலைவரே!
பள்ளி உளி கொண்டு
பாமரர் விழி திறந்த
கல்விச்சிற்பியே!
கல்விக்கண் திறந்தவரே!
அரசியலின் சிம்மாசனமே
அரசியலில் உன்னைத் தோற்கடித்து விட்டு,
இன்று
அரசியலால் நாங்கள்
தோற்றுக் கொண்டிருக்கிறோம்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (14-Jul-18, 2:35 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 2344

மேலே