அழகிய பயணம்
நான் துரத்தி செல்கின்றேன்
கடுமையான பாதைகளை தாண்டி சுகமான வாழ்வை ஏந்தி
என்னவென்பேன் இந்த உலகத்தை
எத்தனை எத்தனை உறவுகள்
எத்தனை எத்தனை இழப்புகள்
எத்தனை எத்தனை காரணங்கள்
நான் துரத்தி செல்கின்றேன்
கவலையான பாதைகளை தாண்டி
சுகமான வாழ்வை ஏந்தி
எத்தனை எத்தனை அக்கறைகள்
எத்தனை எத்தனை சூழல்கள்
எத்தனை எத்தனை பயங்கள்
நான் துரத்தி செல்கிறேன்
அனைத்தையும் தாண்டி
என் பாதையில் நான் செய்கின்றேன்
பலவித ஏமாற்றங்களையும் தாண்டி
அந்த புன்னகைக்கும் நொடிகளை நோக்கி
என் சுகமான வாழ்க்கையை ஏந்தி
பயணிக்கின்றேன் மெது மெதுவாய்...
பயணங்கள் முடிவிற்கு வரும் வேளையில்
வாழ்க்கையின் முடிவு வந்து சேரும்.....