கருப்பு வெள்ளையாகா

கருப்பு வெள்ளையாகா

வண்ணா னொருவனும் வேண்டினன்ச பையிலே
அண்ண வரைகிருஷ்ண தேவராயர்-- என்னவென்றான்
வண்ணானும் ஐயராக ஆசையென ஐயராக்கும்
என்றதுமன் னன்கட் டளை


ஐயமார் ஆயிரம் மந்திரம தையோத
ஐயரானா னாம்வண்ணான் கண்டவரில் -- ஐயமின்றி
ராயனுக்கு பாடஞ்சொல் லத்தெனாலி ராமனும்
ராயன்போ கும்வழிதேர்ந் தான்

துங்கபத் ராநதியில் கங்குல்போ தில்ராயர்
அங்குவரும் போது கருப்புநாயின் -- சங்கையும்
தேய்த்த தெனாலியைரா யார்கண்டார் பாய்ந்துபாய்ந்து
தேய்த்தலேன்ரா மாவெனக்கேட் டார்

மாற்றாம் கருப்புநாயை வெள்ளையாய் மாற்றவழி
கற்றேனென் றான்ராயர் எள்ளியே -- மற்றோர்முன்
ஆகாவெள் ளையாம்பார் போகாக ருப்பென்றார்
போகாரா மன்சொன்ன தும்

வண்ணானை ஐயராக்கும் மன்னர் அறியாரோ
வண்ணானைப் போல கருப்புவெள்ளை -- வண்ணமாற்றல்
என்னசெய்கை என்றிடவண் ணானினா சைக்காக
தான்செய்தே னென்றராயர் பார்


(ஏழு சீர் சந்தப்பா )
ஆறு நூறு கோடி யான பாதை பாரை சுற்றுமே
யாரு கூறு நீயு மாதர் கோச பைய றுத்ததேன்
யாரு(ம்) கூற கேட்டி டாவு(ன் ) காது ஏற்ற தேனிதை
காரு மேவெ(ன்) றேந(ம்) வீர சூர(ர்) சூலை கொன்றாயே

குரைத்து குரைத்து குறைத்தாயே மக்களை
குறைத்தென் கண்டாய் காலில் விழக்கற்றாய்
குறைவிலா மாற்றான் ஓட்டைநீ வாங்கிடா
குறைந்து போனதென் றறிவை
குறைந்த தமிழரால் தமிழ்நா டழிந்தது

பாரதநாட் டுப்பற்றைப் பாருநீய ழித்தனை
பாரத மற்றும் தமிழ்பற்றின் -- வேரதை
மிட்டாய் திராவிடம் காட்டி யொழித்தனை
செட்டாக செட்டிலா னாய்

கடவுள் அறுத்தான் ஒருவன் கடந்தான்
நடவுத் திராவிடம் செய்தார் -- கடந்தார்
தமிழ்தனித்தன் மைகொன்றார் எம்மதத்தான் ஆயின்
தமிழரென்றே கூறலேன் சொல்

வண்ணான் ஐயனா கல்முடி யாவாம்
வண்ணம் கருப்புவெள் ளைநாய் உதாரணம்
ராயரும் அறிந்தும் அறியார் போலவும்
ராயர் வண்ணானின் திருப்திக் காகவே
ராயதேவர் ஐயனாக்கிப் பார்த்தார் அறிவோம்
வண்ணான் ஐயனாகா போதிங்கே பிறமதம்
கிருத்துவ முஸ்லீமும் எப்படித் தமிழராம்
இருக்கலாம் பாசமாய் கலாசாரம் ஒவ்வாதே
இருக்கலாம் சகோதரராய் பண்பாடு ஒவ்வாதே
தமிழர் கலாச்சாரம் நம்மில் பழமையாம்
தமிழர் என்றோர் இனமுண்டு தனியே
தமிழர்கு தனியே குணமுண்டு
தமிழர்க்கு குன்றெலாம் குமரன் இடமாமே

முஸ்லீம் குரான்மெக்கா முகமது மதினா
முஸ்லீமுக்கு அராபி உருதும் உண்டு
முஸ்லீம் குரான்வேதம் பலமொழி யிலுண்டு
முஸ்லீம் பெண்கொடுக்க வாங்குவர் உலகெங்கும்
முஸ்லீம்போல் கிருத்துவர் வாங்குவர் கொடுப்பார்
ஜீசஸ் ஹீப்ரூ பைபிள் பலமொழியில்
ஜீசஸ் பைபிள் கிருத்துவின் வேதமாம்
ஜீசஸ் கிருத்தவர்க்கு இஸ்ரவேல் ஜெருசலேம்
தமிழ்ஜாதிக் குவேறுமொழி சாமியும் கிடையாது
தமிழகத் தியன்நால் வேதத் தினையும்
தமிழாக் கினான்சித் தர்வாக டத்திலடா
தமிழனுக்கு தமிழ்நாடே கதியடா மூடா
தமிழனுக்கு முருகனே கதியடா மூடா
தமிழனை முஸ்லீமும் கிருத்தவனும் அழைப்பது
தமிழரென் றேகேள் மதமற்ற வனாநீ
தமிழர் வேறுகிருத் துமுஸ்லிம் வேறு
தமிழர் மதம்மாறின் முஸ்லீமே கிருத்தவரே
தமிழர் இப்படியேக் குறைந்தார்
தமிழனென்று சொல்லு தலைநிமிர்ந் துபாருமே!!
தமிழனென்று சொல்லு தலைநிமிர்ந் துபாருமே!!

தமிழர்கள் சேரசோழப் பாண்டித் தமிழன்
தமிழர்செய் பூசை சிவனைத் -- தமிழர்
சிவன்தொழுத சேரசோழ பாண்டி எவரும்
சிவமேநம் சொத்தைவிட்ட தேன்

தமிழனேதெய் வம்பொய்யென் றான்பின் தமிழர்
தமிழ்தெய்வம் நீங்கிபிற தெய்வம் -- தமியராய்
ஓடிச்சேர்ந் தார்மறுப்பி லாதவரும் கூட்டினரே
தேடுவதேன் என்தமிழை யும்

தமிழ்நாடு பேர்அறுப தில்தான் தமிழர்
தமிழர்முன் சேரசோழ பாண்டி -- தமிழ்சொல்லான்
மூன்றுநாடும் சேரநாட்டான் சோழநாட்டான் என்பர்போல்
மூன்றும்ஒன் றாய்தமிழ்நா டாம்


முன்பு தமிழ்நாட்டான் என்ப வழக்கில்லை
முன்பு தமிழரெனச் சொல்லானாம் -- மூன்றுநாட்டார்
பின்அறுப தில்தடுமா றிப்பேசல் என்னவாம்
முன்சரித்ரம் மாற்றிமறைத் தார்

சாமான்ய னெல்லாம் சரித்ரத்தில் ஏமாற்றி
ஏமாற்றி யேபிடித்தார் ஓரிடம் -- சாமான்யர்
மூன்றுநாட்டை சேர்த்து பலமதத்தை ஒன்றுகாட்டி
ஏனோமாற் றல்செய்கி றார்

விளக்கம் :
-------------
இந்தியக் கலாச்சாரம் உலகின் மாறுபட்டதாம். அது இந்தியா முழுமை யிலும் சிறுசிறு மாற்றங் களுடன் இன்றும் தொடர்கிறது. அது கடவுள் சிவன் மால் பிரும்மா வழிபா டாகட்டும் திருமணம் சடங்குகள் ஆகட்டும் யெல்லாமும் அப்படித்தான்.

சீன ஜப்பான் மங்கோலியாவில் வட ஆசியக் கலாசாரம் ஆகும். அரபுநாட்டுக் கலாச் சாரம் சுன்னத் கலாச்சாரம் கிருத்து வந்ததும் சுன்னத் செய்யாக் கிருத்துவர் பைபிள் படிப்பவர் தோன்றினர் . சுன்னத்தை தொடர்ந்தவர்கள் 7-ஆம் நூற்றாண்டின் முஸ்லீம்கள் குரானை 5 வேளைத் தொழுவர்.

இவர்கள் வேறு கடவுளை விரும்பமாட்டார். உலகில் இவர்கள் யெந்த நாட்டிலிருந் தாலும் தன்னை கிருத்துவர் அல்லது முஸ்லீம் என்றே சொல்லிகொள்வர். தங்களை மாற்றிக் கொள்ளா குணமுடையவர்..

எழுதியவர் : பழனிராஜன் (14-Jul-18, 6:50 pm)
பார்வை : 156

மேலே