அழுதுவிட்டேன்

தாயாய் சேயாய்
வாழ்ந்த வீடு
ஊனாய் உயிராய் பழகிய
உண்மையான நண்பர்கள்
கஷ்ட நஷ்டங்களில்
பங்கு கொண்ட
பக்கத்து வீட்டார்கள்
பக்தி மணம் கமழும்
தெரு முனைக் கோவில்
எனக்காகவே அசையும்
ஒன்றிரண்டு
தென்னை மரங்கள்
அதில் என்னை மகிழ்விக்க
இன்னிசைக் கச்சேரி நடத்தும்
இரண்டு மூன்று குயில்கள்
எப்போதும் எனைப் பார்க்க
வீட்டு மாடியில் உதிக்கும் நிலா
நான் எப்பொழுதாவது
கரையோரம் கால் பதிக்க
வரும் ஆத்து திருவிழா
என் சொந்தம் இல்லை
என்றாலும் எனக்கு
எப்போதுமே சந்தோஷத்தை
அளித்த நான் உயிருக்கு
உயிராக காதலித்த என்
ஊரை விட்டுச் செல்லும்
கடைசி நொடி
பேருந்தில் ஏறி
முதல் படி தாண்டி
அடுத்த அடி எடுத்து
வைப்பதற்க்குள்
அழுதுவிட்டேன்...
எப்படி இயலும்
எனக்கு முகவரி கொடுத்த
ஊரை விட்டுச் செல்ல........!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (15-Jul-18, 6:55 pm)
பார்வை : 67

மேலே