உன்னை சேர்த்திட

கனவில் என் கைகளை
பிடித்து நடந்த நீதான்
நிஜத்தில் ஒரு
கண்ணசைவைக் கூட
காட்டாது என்னைக்
கடந்து செல்கிறாய்!

உன் நினைவுநீரில்
நீந்தியே வாழ பழகிய
மீன் நான் என்னை
தரையில் வாழச் சொல்கிறாயே
அதென்ன நியாயம்?

உனக்கு
ஆயிரம் ஆசைகள்
இருக்கலாம்! எனக்கோ
ஒரேயொரு ஆசைதான்
அது நீ மட்டும்தான்!

உன் கைகளில் சேரத்தான்
நான் படைக்கப்பட்டிருப்பதாக
நினைக்கிறேன்!நீயோ
யாரோ ஒருவரின் கைகளை
எதிர்ப்பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
உன்னை நீ சேர்த்திட!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (16-Jul-18, 12:08 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : unnai saerthida
பார்வை : 263

மேலே