நாள்காட்டி

விழித்ததும் கிழித்தேன்
நாள்கட்டியை
வேறென்ன கிழித்தாய்
வாழக்கையில் எனக்கேட்டது .

கிழிந்ததும் குறைந்ததும்
நான் மட்டுமா,
உன்வாழ்நாளும் சேர்ந்துதான்
என சிரித்தது .

மறுவருடம் வந்தாலும்
நான் பிறப்பேன் ..
புதுப்பொலிவில், புதுப்பெயரில்...
நீயென்ன செய்வாய் என்று
எனை கிழித்தது.

எழுதியவர் : (16-Jul-18, 11:52 am)
சேர்த்தது : சகி
Tanglish : naalkaati
பார்வை : 131

மேலே