நன்கு வழி சாலை -எதிர்காலம்

கருமை நிறச் சாலையில்
உருண்டோடிக்கொண்டிருக்கின்றன
என் மகிழுந்தின் சக்கரங்கள் .
இரும்பின் மணம் அதன் வெளியெங்கும் !
கடந்து செல்கின்றன கனரக வாகனங்கள்
விரைந்து செல்லும் காற்றாய் !

யாருக்கு தெரியப் போகிறது
அந்த நாட்களைபப் பற்றி ?
யாருக்கு நினைவிருக்கப் போகிறது
அந்த கணங்களைப் பற்றி ?

யார் சொன்னது இச்சாலை
தாரினால் போடப்பட்டிருக்கிறது என்று ?
இது கண்ணீராலும் கவலைகளினாலும்
போடப்பட்டிருக்கிறது.
இவ்வாகனங்கள் இரும்பினை ஏற்றி செல்கின்றன
என்று யார் சொன்னது ?
அது இங்கு வாழ்ந்தவர்களின்
கடைசி மூச்சுகளை கொண்டு செல்கின்றன .

யாருக்கு தெரியப் போகிறது
அந்த நாட்களைபப் பற்றி ?
யாருக்கு நினைவிருக்கப் போகிறது
அந்த கணங்களைப் பற்றி ?

கண்ணீரின் மீதும் கனவின் மீதும்
இரத்தத்தின் மீதும் வலிகளின் மீதும்
சக்கரங்களை ஓடவிட்டுக்கொண்டிருக்கிறேன் நான்...

எழுதியவர் : பா.நிபி (16-Jul-18, 2:00 pm)
சேர்த்தது : பா நிபி
பார்வை : 37

மேலே