இது தான் காதலோ...!!!

இங்கே இருக்கும் நான்
அங்கே இருக்கும்
உன்னில் வாழ்கிறேன்

இது தான் காதலோ....!!!

அங்கே இருக்கும் நீ
அழுதால் இங்கே
இருக்கும் நான்
துடித்துப் போகிறேன்

இது தான் காதலோ....!!!

இங்கே இருக்கும் நான்
அங்கே இருக்கும் நீ

இமையோடு இமை
விழியோடு விழி
விரலோடு விரல்
உடலோடு உடல்
உயிரோடு உயிர்
என எந்நேரமும்
பிரியாமல் வாழ்கிறோமே

இது தான் காதலோ....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Jul-18, 7:09 pm)
பார்வை : 60

மேலே