அல்லி விழியாளே

கண்ணிரண்டும்
அல்லி பூ இதழடி....!!!
அண்ணார்ந்து வானத்தை
நீ பார்க்கையிலே...
மேகம் கூட மோகம்
கொண்டு...
முத்தமழை சிந்துதடி....
அதில்
மோட்சம் பெற்று
சுவர்க்கம் புகுவது...
ஒரு சில மழை துளிகளடி...
மோட்சம் வேண்டுமென
மீண்டும் ஜனனம் வேண்டுதடி...
உன் தேகம் தொடாமல்
மண்ணில் மடிந்து போன
எண்ணற்ற மழை துளிகள்...!!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (17-Jul-18, 11:56 am)
பார்வை : 134

மேலே