பரதமும் வீணையும்

பரதமும் வீணையும்..!
====================

ஆசான் உனக்கு அள்ளிக் கொடுப்பார்
பாசாங் கில்லாப் பக்தியை மெச்சி

அனைத்துக் கலையும் அன்றே கைவர
உனையே வியந்து உலகமே நோக்கும்

துணிந்து ஆசான் துணையைக் கொண்டு
பணிவாய் நீயும் பழகிக் கொள்வாய்

கூசாமல் ஆடவும் கிடைக்கும் கரவொலி
பேசாமல் ரசிப்பர் பார்வை யாளரும்

நல்லா சிகளும் நற்கலை யிலொன்றாய்
நல்வீணை மீட்டவும் நன்றா யறிந்தாய்

பரதமும் வீணையும் பாங்காய்க் கற்கவே
விரத மிருந்ததை வென்றும் விட்டாய்

வல்லமை வளர வகையாய்ப் பலவும்
நல்லவன் நடராசன் நற்றுணை அமையுமே

========================================

*நிலைமண்டில ஆசிரியப்பா*
(தேமா,புளிமா,கருவிளம்,கூவிளம் தவிர ஒன்றிரண்டு காய்ச்சீர்)

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (18-Jul-18, 2:45 pm)
பார்வை : 81

மேலே