ரசிக்கும் கோலம்

ஐப்பசி திங்கள்
அடை மழை காலம்
சில்லென குளிரும் - மெல்ல
சிறையெடுக்கும் நம்மை

இருந்தும் எனில்
இருந்து மெல்ல
விடுதலை யாகி
வாசலில்
முத்து புள்ளிகளை
வெள்ளி கம்பியினால் - நீ
கோர்த்திடும் அழகை
ரசிக்க மனம்
ஏங்குதடி......

எழுதியவர் : சிவகுமார் ஏ (19-Jul-18, 9:30 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : rasikkum kolam
பார்வை : 114

மேலே