அன்னமிடும் கை
ஏ.சி. காரில் உட்கார்ந்து
ஏளனமாய் பார்க்கலாம்-ஆனால்
ஏறுவெயிலில் எரிழுத்து
ஏற்றம் இறைக்க இயலுமோ!
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுகம் என உழைத்து
சோறு போட இயலுமா!
வட்டிக்கும் வயிற்றுக்கும் இல்லாமல் போனாலும்
பயிர் வாட விடாத உழவர்களை!!!!
இந்த புட்டி குடிகள் அறிவரோ.
மண்ணோடு மனம் புதைத்து
மண்டியிட்டு வாழும் மன்னர்களை- இந்த
மாளிகையர்கள் அறிவாரோ!
முத்துமழைக் கோர்த்து
செவ்வயலை சேறாக்கி
பட்டாடை உடுக்கவைத்து
தங்க நெல்மணியை -உன் தங்க தட்டில்
மிளிர செய்யும் பொற்கொல்லரை அறிவீரோ !
அலங்கார விடுதிகளில்
ஆணவ விழாவெடுத்து
அறுசுவை படைத்து
அனாவசியமாய் வீணாக்கும் வீணர்களே!
அன்னவன் அமுது படைக்க பட்டபாடு அறிவீரோ!
அறிவியல் வளர்ந்தது
அறிவு மிளிர்ந்தது எனும்
ஆதிக்கர்களே!
அன்னம் இல்லா வாழ்க்கை எண்ணுவீரோ!
அன்னமிடும் கையை அழிக்கத்தான் துணிவீரோ!
-கலைப்பிரியை