சிதைந்து பாேகும் சிற்பங்கள்

கண்களால் காேலம் பாேடும்
காெள்ளை அழகு என்ன
மெல்லிடை நடை பயிலும்
தேவதையின் அழகு என்ன
பூமிக்கு வந்த பெண்ணுக்கு
பூப்பந்தல் அலங்காரம்
ஊரறிய சடங்கு வைத்து
கன்னியவள் பெண்மைக்கு
காவல் செய்த காளைகள்
என்று ஆணை புகழும் வரலாறுகளில்
கற்புக்காய் தீமிதித்த கன்னியர் வரலாற்றில்
காளைகள் தான் காரணம் என்று
கதைகளும் உண்டு இங்கு

பெண் பெற்ற பேறு "மகப்பேறு"
தாய்மையின் தனிப் பேறு
தாய்மையற்ற பெண்ணுக்கு
மலடி என்ற பெயர் வேறு ஆனாலும்
அவளும் கற்புள்ள பெண் தான்

பச்சைக்குழந்தை என்ன
பள்ளிப் பிள்ளை என்ன
பருவமடையாத பாவை என்ன
மாற்றான் மனைவி என்ன
பெண் என்றால் சிற்பமா என்ன
சிதைத்து விட்டு பாேவதற்கு

தீண்டும் கைகளுக்கு தீர்ப்பு ஏது
சீண்டும் மிருகங்களுக்கு சிறை எதற்கு

"பச்சைப் பிள்ளையின் கெஞ்சல் பாேதாதா"

மனச்சாட்சியற்ற மனித மிருகங்கட்கு
சிரசை அறுத்து தாெங்க விடுவதா
இல்லை உயிராேடு தீ மூட்டி கருக விடுவதா
மனிதமே சாெல்
"பெண் சிற்பங்கள்" சிதைந்து பாேகிறது

எழுதியவர் : அபி றாெஸ்னி (19-Jul-18, 10:47 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 1176

மேலே