காதல் ரசம்
உன் பார்வையின் மாயம் நானறியேனே
அது வந்து காதலாய் நிறைஞ்சிருக்கு
என் மனதெல்லாம், நம் காதலாய்
அறிந்துகொள்வாய் நீ ,அன்னமே
வந்து என் நெஞ்சைகீறி பருகிப்பாரு,
அது கலப்படம் ஏதுமிலா காதல் பாற்குடம்
அது தந்திடும் என்றும் உனக்கு, உன்மேல்
நான் கொண்ட கலப்படமிலா காதல் ரசம்
பிரிக்கமுடியா காதல் அதுவே.