என்னவனுக்கு ஓர் தாலாட்டு

ஆராரோ பாடவா...??
என்னவனே....!!
நாவசைத்து தாலேலோ பாடவா...??
என் மன்னவனே....!!
இளமகன் நீ முதுமகன்...
அனால் என்ன ....??

மடிமேல் துயில் கொள்ளும் நீ...
எனக்கு மழலையன்றோ ...!!!

என் கண்ணாளன்...
நீ
துயில் கொள்ளவே...
பாற்கடலென விழி நீரை
தேக்கி வைத்திடவோ...??
நீர் மெத்தை ஒன்று செய்திடவே....!!
அதில்
மாலவனுக்கு நிகராக நீ
கண்ணயர்ந்திட வா...!!!
சொர்க்க வாசலென
இமை கதவுகளை
பூட்டிடுவேன்...!!!
யாழும் இல்லை
குழலும் இல்லை
என்னிடம்...
இதய துடிப்பிலே
மெட்டொன்று கட்டிடவா...??

நாட்களும் கரைந்து
வருடங்கள் என ஆகட்டும்.....
வருடங்களும் பல யுகங்களாய்
மாறட்டும்....
என் மடிமேல் துயில் கொள்ளும்
நீ..
இன்றும் என்றும்....
என் மழலை தானடா.....!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (19-Jul-18, 10:11 am)
பார்வை : 191

மேலே