மழையே வருக

கண்களை ஏமாற்றி செல்லும் கார்மேகம்
எங்கள் கண்ணீரை மறைக்க கரைந்து வாராயோ ....

விண்ணை பிளந்து வரும் வெள்ளி மழையே
எங்கள் விளைநிலத்தை தழுவ வாராயோ ......

பூமியில் பிறக்கும் முதல் உயிருக்கும்
பூத்து வாசம் தரும் பூவிற்கும்
தேனமுதாய் திகழ்ந்து நிற்கும் தேன்மழையே

வருக ......... வருக.............

வாடிய நெஞ்சங்களை வருட வருக.............

எழுதியவர் : சத்யானந்த் (19-Jul-18, 7:52 pm)
சேர்த்தது : சத்யானந்த்
Tanglish : mazhaiyae varuka
பார்வை : 473

மேலே