காற்று மாசுபடுதல்

#காற்று_மாசுபடுதல்

சாம்பல்கள் வீழ்ந்து
புற்களெரிய
தாங்கியமண்
பூமிப்பிளவேங்கித் துடிக்கிறது,

வெளிவரும் புகையை
சுவாசித்த காற்றும்
நோய்பட்டுக்கொண்டிருக்க,

சுற்றியயிலைகள்
ருத்ரதாண்டவமாடி
உன்சுவாசம் வேண்டாமென்று சொல்ல,
காற்றும் தன்னைக் கடிந்து
கண்ணீரை
வெளிபடுத்துகிறது,

புகையால்
போதையேறிய மூளை
மனதைத் தட்டியெழுப்ப,
சுற்றித்திரியும்
பதுமையாடை தாண்டி அந்தரங்களைத்
தடவியசைபோடுகிறது கண்கள்,

இதழ் கருத்து
வெளிவரும் புகையால்
இயற்கை மாசுபட,
உள்ளிழுக்கப்பட்ட
செல்லுலோஸ் ஆசிடேட் உணவாகி
எரியும் ஈரல்கள்
நெடி பொறுத்தும்,
காத்துக்கொண்டிருக்கிறது
ஓரெரிமலை வெடிப்புக்கு,

தீயபுகை பரப்பி பிரபஞ்சம் பாழாக
நீயும் பாழாவாய் புற்றுநோய் பற்றி!!

எழுதியவர் : தமிழினியன் (19-Jul-18, 8:29 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 188

மேலே