கிளி பற கிளி பற

எதிர்காலம் தெரிய
கிளி சோதிடனிடம் அமர்ந்தேன்
கிளி அட்டையை எடுத்துப் போட்டது
அவன் பாட்டை படித்தான்
அடுத்து ஒரு அழகிய பெண் வந்தாள்
கிளியிடம் விரலை நீட்டினாள்
கிளி அவள் விரலில் வந்து அமர்ந்தது
கிளியைக் கொஞ்சினாள் ஏதேதோ பேசினாள்
சோதிடனிடம் எவ்வளவு வேண்டும் என்றாள்
சில 500 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள்
மகிழ்ந்து போனான் ; கிளி வளர்க்கப் போறீங்களா என்றான்
வளர்க்கவா ..அடைபட்ட கிளியை மீண்டும் கூட்டில் அடைக்கவா ?
பறக்க விடப்போகிறேன் ...
கிளியிடம் சுதந்திரம் சுதந்திரம் பற என்றாள்
விரலில் அமர்ந்து சொன்னதை திரும்பிச் சொன்னது கிளி
பாவம் கூண்டுக்கிளிக்கு சிறகு இருப்பதே மறந்துவிட்டது
கிளியே சுதந்திரம் சொல்லில் இல்லை சிறகில் இருக்கிறது என்று
சிறகை வருடி விட்டாள்..
பிரஞை பெற்ற கிளி சுதந்திரம் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு
சிறகை விரித்து வானில் பறந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-18, 10:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 255

மேலே