அம்மா
ஒற்றை வார்தை காவியம் இது
உயிர் பெற்ற ஒவ்வொருவரும் உச்சரிக்கும் உன்னத கட்டுரை இது
பெற்றவள் கேட்க துடிக்கும் கவிதை இது
என் கட்டுரையின் தொகுப்பை உரைகின்றேன் கேட்பீரா
ஆதியில் அவள் முன்னுரை அரியாத நான்
கூவ்"அ" என்று அலரியபடி அவதரித்தேன்.
அவள் வாழ்வின் பொறுளுரை அறிந்ததாள்
என்னவோ என்றும் அவள் முன் உ"ம்" என்று நிர்கின்றேன்.
என் வாழ்வின் முடிவுரை கானும் வரை அவள்
மடியில் இரந்து கிடப்பேன் "மா" என்று
இந்த கோமாதாவின் கன்றுகுடியாய்
- ஏ. தினேஷ்