உனக்காக நானடி
கண்ணுறங்கும் வேலையிலே....
பால்நிலவை காட்டிச் சோறூற்றிட...
என் கார்கூந்தல் கோதி கதை கூறிட...
ஆராறிறோ தாலாட்டு நீ பாடிட...
என் நிம்மதி துயிலின் சொந்தக்காரி நீ மட்டுமே அம்மா....
உனது ஒற்றை இளவரசி நானடி...
எனது மொத்த உலகம் நீயடி...
என் அஸ்த்தமனத்தின் பொழுதிலும் உன்னை விட்டு விலகாமல் நான் உயிர்த்தறிக்க...
அம்மா உனக்காக வரமொன்று கேட்பேன் இறைவனிடத்தே...