வாத்தியார்-மாணவன் உரையாடல், சிரிக்க, சிந்திக்க

வாத்தியார் : டேய், மணி , இப்ப நான் சொன்ன இந்த
அரிச்சந்திரன்-சந்திரமதி கதையிலிருந்து
நீ அறிந்த புத்திமதி என்ன, கொஞ்சம் இங்க
முன்னாலாவந்து எல்லாரும் கேக்கும்படி சொல்லு
கேட்போம்.

மாணவன் மணி : ஐயா, இனிமே யாரும் நிஜம் சொல்ல கூடாது
நிஜம் சொன்னால் அரிச்சந்திரன் அடைஞ்ச
சித்ராவாடைதான் நாம அனுபவிப்போம்.....

வாத்தியார் : ஏண்டா, கிறுக்க பிடிச்சி இருக்கு உனக்கு
தலை கீழா அல்லவா நீதி சொர நீ............

நிஜம்தான் உண்மையில் உன்னை
காத்துநிற்கும்னு சொல்லுவானு பார்த்தா.....

மாணவன் மணி : ஐயா , நீக்க சொல்றது அந்த கால
கட்டத்துல..... இப்பல்லாம், நிஜம் சொன்னா
தண்டனைதான் கிடைக்கும்.....

வாத்தியார் : ஏண்டா இப்படி விதண்டாவாதம்.



மாணவன் : பின்ன எப்படி ஐயா சொல்லுவேன்....
எங்கப்பா அம்மா தேர்தல்ல ஒட்டு போடா
போனாங்க...... அவங்க பேர்ல யாரோ ஒட்டு
போட்டுவிட்டு போனதா கேட்டு திரும்பி
வந்துட்டாங்க......போலீஸ் கிட்ட சோனா ஒன
வேலைய பாத்துகிட்டு போய்க்கினு இருன்னு
சொல்லிட்டாங்க.....நிஜம் தோத்துடுச்சி
ஐயா, அதான் சொன்னேன், மன்னிச்சுக்கோங்க..

வாத்தியார் (கண்ணில் நீர்; சொல்ல ஒன்னும் இல்லாமற்
தலை சொரிகிறார்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வசுத (21-Jul-18, 8:56 am)
பார்வை : 242

மேலே