காமிகா கவிகா

யாரும்மா நீங்க ரண்டு பேரும்? உச்சிக் குடுமி வச்சிட்டிருக்கீறீங்க?
பாத்தா வெள்ளக்காரப் புள்ளைங்க மாதிரி இருக்கறீங்க!
😊😊😊😊😊
தாத்தா நாங்க பாதி வெள்ளைக்காரங்க. பாதி தமிழ்க்காரங்க.
😊😊😊😊
என்னம்மா சொல்லறீங்க?
😊😊😊😊
உங்க தெருவு கடைசி வீட்டுத் தாத்தாவோட பேத்திங்க நாங்க.
😊😊😊😊😊
அடடா. அமெரிக்காவில வெள்ளக்காரப் பொண்ணக் கல்யாணம் பண்ணீட்டானே அந்த மருதப்பன் பொண்ணுங்களா?
😊😊😊😊😊
ஆமாங்க தாத்தா. நாங்க சொன்னது சரிதானா?
😊😊😊😊😊
சரிதான்டா கண்ணுங்களா. உங்க பேருங்களச் சொல்லுங்க.
😊😊😊😊😊
நாங்க ரண்டு பேரும் ரட்டைப் பிறவிங்க. நான் காமிகா. இவ கவிகா.
😊😊😊😊😊
என்ன உங்க ரண்டு பேருங்களும் 'கா'..'கா' ன்னு முடியுது? உங்க பேருங்க என்ன காய்ங்களக் குறிக்குது? எதாவது அமெரிக்க நாட்டுக் காய்ங்களா?
😊😊😊😊
இல்லங்க தாத்தா. எங்க ரண்டு பேருங்களும் இந்திப் பேருங்க. எதாவது அர்த்தம் இருக்கும். எங்கப்பா உங்களப் பாக்க வந்தா அவரக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்கோ.
■■■■■■■■■■■■■■■■■■■■■◆■■■◆
Kamika = desired
Kavika = poetess.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
திரைத் தமிழைத் தவிர்ப்போம். மொழிக் கலவையை ஒழிப்போம்.

எழுதியவர் : மலர் (20-Jul-18, 12:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 144

மேலே