குப்புச்சியா
வாடா குப்பா. மேல் படிப்புக்குப் பட்டணத்துக்குப் போயி ரண்டு மாசங் கழிச்சு வந்திருக்கிற. நல்லா இருக்கிறயா?
😊😊😊😊😊
பாட்டிம்மா நான் இப்ப குப்பன் இல்ல.
அந்தப் பேரு பள்ளிப் படிப்போட முடிஞ்சு போச்சு. கல்லூரில குப்பன்ங்கற எம் பேரக் கேட்டா எல்லாம் குப்பையைப் பாக்கறமாதிரி பாக்கறாங்க. "என்னடா தாத்தா காலத்துப் பேர வச்சிருக்கிறயே உனக்கு அசிங்கமா இல்ல? எங்களப் பாருடா. நாங்கெல்லாம் அருமையான அர்த்தம் தெரியாத அழகான இந்திப் பேருங்களோட இருக்கிறோம்"ன்னு சொல்லி என்னக் கிண்டல் பண்ணறாங்க பாட்டிம்மா
😊😊😊😊😊
அது உங்க தாத்தா பேருடா சாமி. அதுக்கென்னடா கொறை?
😊😊😊😊😊
அந்தப் பேர வச்சுட்டு என்னால தலை நிமிர்ந்து நடக்க முடியல. அதனால எம் பேர 'குப்ஜி' ன்னு மாத்திட்டேன் பாட்டிம்மா.
😊😊😊😊😊
குப்புச்சியா? என்னடா பொட்டப் புள்ள பேரு மாதிரி இருக்குது?
😊😊😊😊😊
????????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.