புதைந்த சிலை
அந்த கிராமத்தில் வெளியே அமைந்திருக்கும் அந்த தீய சக்தி யார் என்றால்?
கொள்ளைக்காரர்கள், சிலை திருட்டு செய்பவர்கள் மற்றும் அந்தச் சிலையைப் பற்றி அறிந்த பல மாயாஜாலங்கள் தெரிந்த மந்திரவாதிகள். இவர்களிடமிருந்து அந்த கிராமத்தில் வாழும் பூசாரி குடும்பம் அந்தச் சிலையை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியே பல நாட்கள் கழிந்து கொண்டே வருகின்றன. திருவிழாவில் ஏற்பாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றது. அதற்கும் மேலாக பூசாரி உறவினர்கள் அனைவரும் அந்த திருவிழாவுக்கு வரவேற்கப்பட்டனர்.
இந்த திருவிழாவை பயன்படுத்தி அந்த சிலையை கைப்பற்ற பலர் பல திட்டம் போடுகின்றனர்.
அந்த ஊர் தர்மகத்தா அச்சிலையை நால்வர் மூலம் அச்சிலையை திருடி தன் அரண்மனையில் வைக்க முடிவு செய்தார். குறி சொல்பவன் இன்றைய திருவிழா எப்படி இருக்கும் என்பதனை தன் சோலி மூலம் அரிய சோலியை உருட்டினான்.
திருவிழாவில் ஏதோ தடங்கல் வரப்போகிறது. அதை நீ தான் தடுக்க வேண்டும் என சோளி யின் முடிவு இருந்தது.
குறி சொல்பவன் ராமலிங்கம் பூசாரி சந்தித்து இது குறித்து பேச விரும்பினார். தர்மகர்த்தா மட்டுமல்லாது கொள்ளைக்காரர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு சிலையை எப்படியாவது கடத்த வேண்டும் அதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும் என திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். அவர்களை அடுத்து மந்திரவாதி தன் புத்தியால் இந்த திருவிழாவில் ஆவுது அச்சிலை என் கைவசம் வரவேண்டும் என முடிவு செய்தான். தன் சீடர்களுக்கு வசியம் செய்வது அச்சிலையை தூக்கி வருமாறு உத்தரவிடுவதாக முடிவு செய்தான்.
இப்படி அனைவரும் ஒருத்தருக்கு ஒருவர் போட்டி போட்டு அச்சிலையை கைப்பற்ற முயற்சிக்கின்றனர் ஊர் மக்களோ இதை அறியாது தங்கள் திருவிழாவிற்கு வெகுவாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
பூசாரி குடும்பத்தில் பூசாரி அவர் மனைவி அவர்களுக்கு ஒரு மகள் பெயர் வைஷ்ணவி. அந்த கோவிலை சுத்தப்படுத்துவது பூ தொடுப்பது அதுமட்டுமல்லாது தன்
தந்தைக்கு உதவியாக இருப்பது என அனைத்து வேலைகளையும் வைஷ்ணவி செய்வாள்.