தமிழை நேசிப்பவன்

பட்டங்களுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
உயிரோட இருக்கையில் யாருக்கும் கண்டுக்கவில்லை.
செத்தபிறகு ஆழ்ந்த இரங்கல் மட்டும் சொல்லி விடுவார்கள்.
என்னவெல்லாம் சொன்னாரென விளம்பரமாய் பேசித்திரிவார்கள்.
சற்று வேதனைதான்.
நாளை உங்கள் முடிவும் இப்படி தான்.

துதிபாடும்,
முகதுதிபாடும் கவிஞர்களைத் திரட்டி சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாரா?
எங்கே வளர்த்தார்?
எவ்வளவு தூரம் வளர்த்தார்?
எல்லாம் கட்டுக்கதை.
தமிழின் பெயரால் அவர் வளர்ந்து நின்றார்.
மக்களிடையே பரவலாக அறிமுகமானார்.

ஏப்பா? எல்லாரையும் எடுத்தெறிந்து பேசாதே என்று சிலர் வருவார்.
உண்மையை உரக்கச் சொன்னால் எடுத்து எறிந்து பேசுகிறேன்.
உம்மை எடுத்து எவ்வளவு தூரம் எறிந்தேன்?
மௌனமாக செல்லாதே.
பதில் கூறிவிட்டுச் செல்.

தற்பெருமை பாடாதே.
தலைக்கனத்தில் ஆடாதே.
தனக்குத் தானே தலைவன், முத்தமிழ் அதிபதி என்று பட்டம் சூடி ஆடாதே.
தமிழிருக்கும். நீ இருப்பது இயலாத காரியம்.
அதோ பார் எருமை உன்னைக் கண்டு சிரிக்கிறது.
சாகப்போற நிரந்தரமில்லா ஜடத்தில் இருந்து கொண்டு தற்பெருமையில் காலத்தை ஓட்டி தமிழை நேசிப்பவனை கேனயனாக்குவது.
தமிழை நேசிக்கிறேன்,
கண்டபடி தமிழில் உளறுபவர்களை அல்ல.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jul-18, 8:55 am)
பார்வை : 1302

மேலே