தாய் மொழி

இன்னொரு பிறப்பு இருந்தால்
தவமேனும் செய்தாவது தமிழனாய்
பிறக்க வேண்டும்
தரணி எங்கும் சென்று
தமிழின் சிறப்பை யாவரும்
அறிய செய்ய வேண்டும்
ஒரு சொல்லில் ஓராயிரம்
பொருள் தருவது எங்கள் மொழி
சொல்லில் பொருளில் எழுத்தில்
இனிமை தருவது எங்கள் மொழி
சிந்திக்க தூண்டும் மொழி
அறிவை வளர்க்கும் மொழி
அமிழ்தினும் இனியதாய் பேரானந்தம்
தருவது எங்கள் மொழி
நாவிக்கும் செவிக்கும் இன்பம்
தருவது எங்கள் மொழி
பாமரனையும் பாவலன் ஆக்கிய
செம்மொழியாம் எங்கள் மொழி
மன்னாதி மன்னருக்கும் கவி
பாடியது எங்கள் மொழி
தொன்மையான மொழி
மேன்மையான மொழி
மொழிகளுக்கெல்லாம் தாயான மொழி
எங்கள் தாய் தமிழ் மொழி
மெய்யறிவை யான் பெற்றேன்
பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவே
இப்புவியில் மீண்டும் மீண்டும் பிறப்பேன்
தமிழனாய் !
- கோவை உதயன்.