முதற்பரிசு

அதைக் கேட்டதும்
அவளை அவன்
அப்படியே வாரியணைத்து
அங்கமெல்லாம் முத்தம்தந்து
தூக்கி இறக்கினான்
ஆம் அவள் அவளிடம் சொன்னாள்,
'அன்பே எனைப்பரிசோதித்து
மருத்துவர் கூறினார்,இப்போது
'என் நாடி இரட்டை நாடியாம்
ஆம் அதில் வேறோர் நாடி கேட்குதாம்'
என்றாள், மேலும் ஆள் கூறினாள்


'அன்பே இதுநாள் வெறும் காதலராய்
இருந்தோம் அப்போதெல்லாம் நீ
தினமும் ஓர் ரோசா செண்டு தருவாய்
என் மனம் மகிழ, மணமானது, இப்போது
மருத்துவர் சொன்ன செய்தி ,'அந்த
இரு நாடி' என்றதில் நீ திருமணத்திற்கு
பிறகு தந்த 'இந்த முதற்பரிசு' நாளை
நமக்கு வரப்போகும் 'பிள்ளைக்கனியமுது'
இதற்கிணை ஏதுமிலை ஒரு பெண்ணிற்கு
தாய்மை அடைவது என்பது அவளுக்கு
வாழ்வில் ஒப்பற்ற விருதென்றாள்'
அதைக்கேட்டு அவன் புளகாங்கிதம் அடைய
இருவரும் இப்போது ஆனந்தத்தின் எல்லையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jul-18, 9:35 am)
பார்வை : 113

மேலே