விழிப்புணர்வு

பிறந்தது இறக்கும் எனத் தெரிந்தும் தன் சுயநலத்திற்காக உயிர்களைப் பலியிடும் மக்களே!
தானாக போகப் போகிற சீவனை உலக்கையால் அடித்துக் கொல்வானேன்.
தமிழ் மக்களிடையும் உள்ள குற்றங்களைக் களைய கவிதை புணையவும், கருத்து, சிந்தனை விதைக்கவும் அறிஞர்களுக்கு பஞ்சம்.
அங்கே முற்போக்கு என்று முகத்துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
களவுமிகு காதலையும் காமத்தோடு சேர்த்து கவிபாடி விதைக்கிறார்கள்.
வரிகளைக் கேட்டு இளைஞர்களின் பாலுணர்வு தூண்டப்பட,
கீழ்த்தரமான புத்தியுள்ளவர்களுக்கு பட்டங்களும் பதவியும்,
கையில் கிடைத்தால் பலியிடுவேன் என்றேன்,
ஆழ்மனம் விழித்துச் சொன்னது, " சும்மா போகப்போகிற உயிரை உலக்கையால் அடித்துக் கொல்வானேன். ",என்று.

உண்மைதான், கேடுகள் நிலைப்பதில்லை.
தகாத முடிவெடுத்தவன் தகாத செயலாலே செத்து மடிவானாக என்று இயற்கை பாடும் சிந்து, உணர்ந்த நீ வாழ பழகு.
உணர்ச்சிக்கு அடிமையாகாமல் அன்பை மனதில் நினைந்து உன் மேல் அன்பு கொண்டவர்களை எண்ணிப்பார்,
பகைமை உடையவர்கள் எண்ணிப்பார்.
அவர்களுடைய மனநிலையில் சிந்தித்துப்பார்.

சும்மா போகப்போகிற உயிரை உலக்கையால் அடித்துக் கொல்வானேன்!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jul-18, 9:26 am)
Tanglish : VILIPPUNARVU
பார்வை : 1840

மேலே