கஷ்டங்களால் எனக்கொரு நஷ்டமும் இல்லை
கஷ்டங்கள்,
கஷ்டங்கள் எந்த நஷ்டங்களும் நமக்கில்லை,
வீதியெங்கும் வெறும் புலம்பல்கள்,
கண்ணீர் துளிகளே நஷ்டமாகின்றன,
கஷ்டங்களால் வேறென்ன நஷ்டங்கள்?
நான்கு மகன்களைப் பெற்றாலும்
ஒருத்தனும் கடைசி காலத்தில் கண்டுக்கவில்லை,
இருந்தாலும் அந்த மனம் கஷ்டமாய் எண்ணவில்லை.
உழைத்தே உயிர் வாழ்கின்ற அந்த மாண்பை என்ன சொல்ல?
சிற்றெறும்பு கடிக்கும் முன்னே கதறி அழும் பேர்வழிகளுக்கு மத்தியில் தன் கஷ்டங்கள் தன்னை ஆட்கொள்ளவிடாமல் உழைத்து வாழ்ந்து தன் வழுவு குறைந்த நேரம் யாரிடம் சொல்லாது தன் உயிரை நீங்கி மானத்தோடு, தன் மகன்களின் நல்வாழ்விற்காக அவர்களை நாடாமல் வாழ்ந்த அந்த பண்பு அல்லவோ உயர்ந்தது.
ஏன் கஷ்டப்படுறீங்க? என்றால் கஷ்டங்களால் எனக்கொரு நஷ்டமும் இல்லை என்றிட்ட அந்த வயதானவர்கள் முன், நம் கஷ்டங்கள் ஒன்று பெரியவை அல்ல.
அதனால் நமக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படப் போகிறதில்லை.
கடமையைச் செய்.
உழைந்து வாழ்ந்தால் வாழ்க்கைக்கு போதுமானது கிடைக்கவே செய்யும்.
ஆடம்பரமே அளவில்லா கஷ்டங்களுக்கு காரணம்.
மீண்டு சொல்கிறேன், கஷ்டங்களால் எனக்கொரு நஷ்டமும் இல்லை.
உழைத்து வாழ்வதால் நஷ்டங்கள் ஏற்பட்டாலும் எனக்கொரு கஷ்டமும் இல்லை.